கடற்கரையில் இருந்து மது அருந்திய குடும்பம் ஒன்றுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. பிரதமர் Jean Castex அறிவித்ததன் படி, இந்த ஈஸ்ட்டர் விடுமுறை காலத்தில் பொது இடங்களில் இருந்து மது அருந்தவோ, விற்பனை செய்யவோ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ட்டர் தினமன்று, Hérault மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் குடும்பம் ஒன்றுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. கடற்கரையில் வைத்து மது அருந்திய குற்றத்துக்காக அவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
ஒருவருக்கு €135 யூரோக்கள் படி, மொத்தமாக €405 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.