பிரான்ஸ் தலைநகர் ஒவ்வொரு 30 நொடிக்கும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்! எச்சரிக்கும் சுகாதார அமைச்சர்..பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒவ்வொரு 30 நொடிகளுக்கும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த செவ்வாய் கிழமை ஊடகம் ஒன்றிற்கு சுகாதார அமைச்சர் Olivier Véran அளித்துள்ள பேட்டியில்,கொரோனா தொற்று பரிசில் மிகவும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு 30 நொடிகளுக்கும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர். அதேவேளை ஒவ்வொரு 15 நிமிடத்திலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
பாரிசில் உள்ள புத்தக கடைகளை திறக்கவேண்டும். அமேசானில் புத்தகம் வாங்குவதற்கு பதிலாக கடைக்குச் சென்று புத்தகத்தை வாங்கவேண்டும் என பாரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்திருந்த நிலையில், அவரின் இந்த கருத்துக்கும் சுகாதார அமைச்சர் Olivier Véran பதிலளித்தார்.நான் மக்களை காக்க வேண்டும் என சொல்கிறேன். பாரிஸ் நகர முதல்வர் தனது தூக்கமற்ற இரவை காப்பாற்ற முனைகிறார். தவிர அவர் பாரிசின் சுகாதார நிலமைகளை நன்கு அறிந்தவர்! எனவும் Olivier Véran கூறியுள்ளார்.