உருமாறிய கொரோனா வைரஸ் அதிக பரவும் தன்மையை கொண்டது என்பதை தரவுகள் நிரூபித்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தொற்றுநோய்களுக்கான ஜேர்மனியின் ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் Lothar Wieler கூறியதாவது, பிரித்தாினா, டென்மார்க் மற்றும் நெதர்லாந்தில் இருந்து பெறப்பட்ட சமீபத்திய தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், கொரோனா வைரஸ் மாறுபாடுகள் அதிக பரவும் தன்மைமைய கொண்டது என்பதை காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.
மேலும், நோய் பாதிப்புள்ள ஒருவர் அதை சராசரியாக எத்தனை பேருக்கு பரப்புவார் என்பதை குறிக்கும் ‘R’ எண், முதலில் தோன்றிய உண்மையான தொற்றை விட மாறுபாடுகளுக்கு 0.5 அதிகம் என Lothar Wieler குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் கடந்த ஆண்டு பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா தோன்றியது முதல், மாறுபாடுகள் அதிகம் பரவும் என விஞ்ஞானிகள் பரிந்துரைத்து வந்தது உறுதியாகியுள்ளது.