Hollandtamilan

சீனாவில் 9 கோடி தரமற்ற முக கவசங்கள் பறிமுதல்.

சீனாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 9 கோடி தரமற்ற முக கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உலகில் பல நாடுகளும் கொரோனாவை எதிர்த்து போராடுவதால் முக கவசம் உள்ளிட்ட பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.

இவற்றின் பெரும் பங்கு சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. அதே சமயம் சீனாவிடமிருந்து வரும் பாதுகாப்பு கவசங்கள் தரம் இல்லாமல் இருப்பதாக புகார் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சீனாவில் சுமார் ஒன்றரை லட்சம் வர்த்தக நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 9 கோடி தரமற்ற முக கவசங்களும், 4 லட்சத்து 18 ஆயிரம் பாதுகாப்பு கண்ணாடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதே போல் சுமார் 8.5 கோடி ரூபாய் மதிப்பிலான தரமற்ற கிருமி நாசினியும் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு வர்த்தக கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.