Hollandtamilan

அமெரிக்காவில் முதன்முறையாக வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட பக் வகை நாய்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, வின்ஸ்டன் என்று பெயரிடப்பட்ட அந்த நாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இது குறித்து விளக்கம் அளித்த டியூக் பல்கலை துணைப் பேராசிரியர் ஹீதர் மெக்லீன், ‘ வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதால் பெரிய அளவு மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை’ என்று கூறியுள்ளார்.