Hollandtamilan

Nedcar பணியாளர்கள் கொரோனா வழிமுறைகளைப் பெறுகிறார்கள்.

புதன்கிழமை தொழிற்சாலை கட்டங்களாக மீண்டும் தொடங்கப்படும் என்பதால் Bornனில் உள்ள VDL-Nedcar  ஊழியர்கள் திங்களன்று ‘ஒன்றரை மீட்டர் பயிற்சி’ பெற்றனர்.  செவ்வாய்க்கிழமையன்று ஊழியர்களுக்கு கொரோனா நடைமுறை விளக்க பயிற்சியும்  பாதுகாப்பு உபகரணங்களை  கையளும்முறை  பயிற்சியும்  இருக்கும்.

பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மகிழூந்து  தொழிற்சாலை Geleen நில்  உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து முகக் கவசங்களை ஒழுங்கு  செய்துள்ளது. கூடுதலாக, 5,000 ஊழியர்கள் கையுறைகள், முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும். மேலும், எல்லோரும் வேலை ஆடைகளில் வேலைக்கு வந்து ஒரே உடையில் வீட்டிற்கு செல்ல வேண்டும்.