Hollandtamilan

Heerlen IKEA மீண்டும் திறக்கப்பட்டது !!!கடையில் நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள்.

செவ்வாய்க்கிழமையன்று IKEA கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால், நாட்டின் பல இடங்களில் IKEA கடைகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கின . மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த Delft IKEA இல் தடுப்பு வேலிகள் போடப்பட்டிருந்தது .

அதிகபட்சம் 320 வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் கடையில் இருக்க முடியும். Haarlem, Amersfoort மற்றும்  Barendrecht ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். Heerlen Ikea மீண்டும் திறக்கப்பட்டது. “எந்த நெருக்கடியும்  இல்லை, எல்லோரும் நடவடிக்கைகளை சரியாக பின்பற்றினார்கள்  என்று Heerlen IKEA கிளை மேலாளர் Kim Korsten கூறினார் .

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்வீடன் நாட்டு கடை ஆறு வாரங்களுக்கு முன்பு நெதர்லாந்தில் அதன் அனைத்து கிளைகளையும் மூடியது. இதற்கிடையில், வாடிக்கையாளர்கள் இணையவழி அமைவி (Online Order) செய்தனர் .