Hollandtamilan

Heerlen இல் மரண விளிம்பில் இருந்து தப்பிய பாதசாரிகள் ..

Heerlen னைச் சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் UTERWEG இல் மரணம் சம்பவிக்ககூடிய விபத்தை ஏற்படுத்தி பாதசாரிகளை  கொலை செய்ய  முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.  பிற்பகலில், மகிழூந்து ஓட்டுனர்  முதல் முறையாக விபத்து ஏற்படுவதற்கு முன்பு போக்குவரத்துக்கு சமிக்கை நிறுத்தத்தில் சிவப்பு விளக்கு எரிந்த பொது வண்டியை நிறுத்தாமல் சென்றார்.

அதன் பின்னர் அந்த நபர் தனது மகிளூந்தை  நடைபாதையில் ஏற்றி தாறுமாறாக செலுத்தினர் ., பல பாதசாரிகள் மரணஓலமிட்டு  ஒரு பெண் உட்பட பலர் மரணத்திலிருந்து தப்பினார்கள் . இருப்பினும், அந்த சம்பவங்களுடன் அந்த நபர்  நிற்கவில்லை; அந்த நபர் மற்றொரு விபத்தை ஏற்படுத்தினார்.

பின்னர் அவர் காரின் உள்ள தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு  தடுப்பு காவலில் உள்ளார்.  வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் வரை கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று வழக்கறிஞர் Wesley Houben கூறியுள்ளார்.