Hollandtamilan

Heerlen இல் உள்ள Van Der Valk விடுதி சூதாட்ட அறையில் துணிகர கொள்ளை…

புதன்கிழமை அதிகாலை  Heerlenனில் உள்ள Casino aan Terworm மில் ஒரு துணிகர கொள்ளை நடந்தது. இக் கொள்ளை சம்பவத்தின் போது சூதாட்ட விடுதியில் இருந்த ஏராளமான பணத்தின் ஒரு தொகை மிகத்துணிவாக கொள்ளைஅடிக்கபட்டது .  Heerlen மாநகர காவல்துறையினர் இந்த கொள்ளை சம்பவம்  குறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளர்கள் .விசாரித்து வருகின்றனர்,

மேலும் கொள்ளை சம்பவம்  குறித்து தகவல் திரட்ட சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள். கொள்ளை சம்பவம் குறித்த அறிக்கை புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காவல்துறைக்கு  கிடைத்தது . காவல்துறையினர்  உடனடியாக விசாரணையைத் தொடங்கினார்கள் . குறிப்பிட்ட சில  ஆண்கள் ஒரு குறுகிய நேரத்தில் சூதாட்ட விடுதிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளைஅடித்துக்கொண்டு  விடுதி வாசலில் தயாராக நின்ற மகிழூந்தில் Kasteel Terworm. திசையில் , தப்பி ஓடினார்கள் .

இக்கொள்ளை சம்பவம் பற்றி தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல்துறைக்கு அதை.0900-8844 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள் .