Hollandtamilan

Geleen னில் பிரிட்டிஷ் வைரஸ் கவலையில் Maasland பிராந்தியம்.

பிரிட்டிஷ் கொரோனா Geleen னில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்த கவலைகள் பெல்ஜிய மாஸ்லாந்து பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்றன. Vlaams நாடாளுமன்ற உறுப்பினரும் Kinrooi நகரபிதாவாகிய  Jo Brouns கூறுகையில் பிரிட்டிஷ் வைரஸ் எப்போது  எல்லையைத் தாண்டும் என்பது கேள்வி குறியாக உள்ளதாக கூறினார் .

பிரிட்டிஷ் கொரோனா வைரஸ் Geleenனில் மூன்று நபர்களிடம் பரவியுள்ளது . Maasland பிராந்தியத்தில் உள்ள kinrooi   முதல் Lanaken  வரையிலான பள்ளிகள், குறுகிய காலத்தில் போதுமான விரைவான கொரோனா சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் . இது குறித்து Vlaamse கல்வி அமைச்சர் Ben Weyts ஸிடம் Kinrooi நகரபிதா  Jo Brouns கேள்விகள் கேட்டுள்ளார். பள்ளிகளில் விரைவான கொரோனா  சோதனைகளை செய்ய முடியும் , ஆனால் பிரிட்டிஷ் வைரஸ் பரவல் அதிகரித்தால் சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளையும் மின்னல் வேகத்தில் சோதிக்க வேண்டியது அவசியம்.

அதற்கு திறன் தேவை. Maasland பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான டச்சு குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள். பிரிட்டிஷ் வைரஸ் இந்த வழியின் மூலம் பரவலாம். எனவே அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். பின்னர் பிரிட்டிஷ் வைரஸ் சோதனைகளை பள்ளிகளில் விரைவாக செய்ய முடியும் என்று Jo Brouns நம்புகிறார் .