Hollandtamilan

Galgeweg க்கில் உள்ள சுழல்சந்தியில் Oranjesluisweg செல்லும் வழியில் ஒரு காவல்துறை வாகனமும் லொறியும் மோதி விபத்து ஏற்பட்டது.

Galgeweg க்கில்  உள்ள சுழல்சந்தியில் Oranjesluisweg செல்லும் வழியில் ஒரு காவல்துறை வாகனமும் லொறியும் மோதி விபத்து ஏற்பட்டது. காவல்துறை வாகனத்தில்  இருந்த காவல்துறை அதிகாரிகள் Prins Mauritsstraat இல் ஏற்பட்ட  தீ விபத்துக்காக ஒளிரும் விளக்குகளுடன் Maasdijk நோக்கி மிக விரைவாக சென்று கொண்டிருந்தனர், அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் இன்னும் உள்ளே இருக்கக்கூடும்.

அவர்களை விரைந்து சென்று காப்பற்றவேண்டும் என்ற அவசரத்தில் சுழல்சந்தியில்  லொறியை முந்திக்கொள்ளலாம் என்று சக்கரத்தின் பின்னால் இருந்த அதிகாரி நினைத்தார், ஆனால் காவல்துறை அதிகாரி நினைத்தமாதிரி லொறி ஓட்டுனர் அபாய சமிக்கையுடன் விரைந்து வந்த காவல்துறை வாகனதிட்க்கு வழி விடாததால் இவ்விபத்து ஏற்பட்டது . காவல்துறை வாகனத்தின்  வலது பின்புறம் லொறி இன்  இடது முன் பக்கம் மோதியது, இரு வாகனங்களும் நகரமுடியாமல் சம்பவ இடத்திலேயே நின்றன .

ஒரு ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்தது , ஆனால் யாரும் காயமடையவில்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த ஓட்டுனருடன் சேத படிவத்தை நிரப்ப காவல்துறை அனுமதிக்கப்பட்டது. ஒளிரும் விளக்குகள் மற்றும் அபாய ஒலியுடன்  ஒரு காவல்துறை  வாகனம் உங்களை கடந்து சென்றால், நீங்கள் உங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட வேண்டும் ..இது நெதர்லாந்து சட்டம் அடுத்த முறை இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க காவல்துறை வாகனமோ அல்லது மருத்துவ விரைவு ஊர்தி சுழல் விளக்குகளுடன்   வந்தால் ஒதுங்கி வழிவிடுவது நல்லது ..