Hollandtamilan

Eindhoven இல் Jumbo அங்காடியை கொள்ளையடித்த நபர் கைது .

நேற்று திங்கள்கிழமை காலை, Weert ஐ சேர்ந்த  35 வயதான ஒருவரை அவரது படுக்கையிலிருந்து காவல்துறையினர் கைது செய்தனர். அவர் Eindhovenவனில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக தெரியவந்துள்ளது. Stationsplein லினில் உள்ள Jumbo சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பண பெட்டியை  திருடிய  திருடன் அவர் என்று கூறப்படுகிறது.

சந்தேகநபர் காலை 6:00 மணியளவில் Eindhovenனில் உள்ள அவரது காதலியின் வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டபோது, ​​அவரது கார் மற்றும் ஒரு தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டன. ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை Eindhovenனில் நடந்த ஊரடங்கு கலவரத்தில்  ​​சந்தேக நபர் பலமுறை கலவரத்தில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறையினர்  தெரிவித்தனர். காவல்துறை  அதிகாரிகள் அவரை CCTVஇல் அடையாளம் கண்டனர் .

அவர் 18-Septemberpleinஇல் பல முறை அதிரடி காவல்துறையினருக்கு சவால் விடுத்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர் கலவரத்தை தூண்டியது  மற்றும் வார்த்தையிலும் சைகையிலும் காவல்துறையினரை அவமதித்தல்  ,காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது. அவர்  Jumboவை கொள்ளையடிக்கும் போது CCTV வசமாக மாட்டிக்கொண்டார்.