Hollandtamilan

Eindhovenனில் உள்ள Catharina மருத்துவமனையில் கொரோனா தொற்று.

Eindhovenனில் உள்ள Catharina மருத்துவமனையில் கொரோனா பரவியுள்ளது . இருதய அறுவை சிகிச்சை துறையில், 13 நோயாளிகள் மற்றும் 17 ஊழியர்கள் பிரிட்டிஷ் வைரஸின் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவசர  அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடி இருதய  அறுவை சிகிச்சை தொடர்ந்து வழங்க மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது.

நோயாளிகள் அவர்களின் நோய்க்கு மேலதிகமாக, கொரோனா நோய்த்தொற்றுடன் போராட வேண்டியிருக்கும் என்று இயக்குநர்கள் குழுவின் தலைவர் Nardo van der Meer கூறினார்.  இது பாதிக்கப்பட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கும் பொருந்தும். ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சாத்தியமான அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டாலும், இந்த நோய்த்தொற்றுகள் எவ்வாறு தோன்றின என்பதை பற்றி  நாங்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்று Nardo van der Meer கூறினார் .