Hollandtamilan

Den Haag இல் 30 பேர் கைது

சனிக்கிழமை பிற்பகல் Den Haag இல் சுயதனிமைப்படுத்தல் சட்டத்திற்கு  எதிர்ப்புத் தெரிவித்த டஜன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது வெளிப்பாடுகள் சட்டத்தை (WOM) மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, Koekamp மற்றும் Denhaag CS இடையே கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை முப்பது ஆக உயர்ந்துள்ளது.

Koekampபில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காவல்துறை  அதிகாரியை அவமதித்தது குறிப்பிடப்படுகிறது. ஒன்றரை மீட்டர் நடவடிக்கைக்கு இணங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்று செய்தித் தொடர்பாளர் இன்னும் சொல்ல முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை, Koekampபில் நிலைமை “கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினார் .

Denhaag இல்  உள்ள koekampபில் சனிக்கிழமை பிற்பகலில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் கூடினார்கள் . சுதந்திரத்திற்கான அழைப்பு மற்றும் கொரோனா நெருக்கடியில் அமைச்சரவையின் தற்போதைய கொள்கைக்கு எதிரான எதிர்ப்பு என்று முகநூலில் வந்த  அழைப்புகளின்படி,  எதிர்ப்பாளர்கள் ஓன்று கூடினார்கள்