Hollandtamilan

39 வயதான Sanna Elkadiri நெதர்லாந்தில் முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் .

39 வயதான Sanna Elkadiri நெதர்லாந்தில் முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் .புதன்கிழமை காலை 8.15 முதல் 8.30 மணி வரை Veghelலில் உள்ள GGD கொரோனா தடுப்பூசி மையத்தில்  கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் டச்சு நபர் Eindhovenனைச் சேர்ந்த 39 வயதான Sanna Elkadiri ஆவார்.

Sanna Elkadiri Boxtelடலில் உள்ள வயோதிபர் மடமான  Het Wereldhuis ஸில் பணிபுரிகிறார், அங்கு முதுமை அல்லது உடல் பிரச்சினைகள் உள்ள 124 வயதானவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். அவரது வாடிக்கையாளர்கள் மொராக்கோ மற்றும் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்.