Hollandtamilan

வாய் கவசம் அணிவதை அதிகபடுதவேண்டும்.

கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், மூன்று பேரில் இருவர் பொது உட்புற பகுதிகளில் வாய் முககவசம் அணிவதை  ஆதரித்து  உள்ளனர். வெளிப்புறம் உட்பட அனைத்து பொது இடங்களிலும் தேவைபட்டால்  ஒரு முககவசம் அணியலாம் என்ற  கருத்துக்கு  24,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடையே eenvandaag என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஆராய்ச்சியில் இருந்து இது தெளிவாகிறது.

சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Ferd Grapperhaus  நெதர்லாந்தில் வாய் கவசம் அணிவது அவசியமில்லைளை  என்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். பத்து உறுப்பினர்களில் நான்கு பேர் (37 சதவீதம்) இது ஒரு நல்ல விஷயம் என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் “மக்கள்  சமுக இடைவெளியை கடைப்பிடித்தால் முககவசம் அணியவேண்டிய அவசியமில்லை 46 சதவிகிதம் உறுபினர்கள் முககவசம் அணிவதை ஆதரிக்கிறார்கள் . இருப்பினும், கணக்கெடுப்பின்படி, பெரும்பான்மை (67 சதவிகிதம்) உட்புற பகுதிகளில் வாய் முகமூடி தேவைக்கு ஆதரவாக உள்ளனர் .ஆனால்  60 சதவீதம் மக்கள் வாயில் கவசத்தை  பார்ப்பது நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் இன்னும் இருக்கிறது என்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது என்று நினைக்கிறார்கள்.

வாக்கெடுப்பில் 51 சதவீதம் மக்கள்  அதிகமான பொது இடங்களில் முகமூடிகளை அணிந்தால் பாதுகாப்பான உணர்வைத் தரும் என்றும் . 53 சதவீதம் மக்கள் மற்றவர்களிடமிருந்து தூரத்தை வைத்திருப்பதில் எந்த விளைவும் இருக்காது என்றும் கூறினார்கள் . எல்லோருக்கும் வாய் கவசம்  இருந்தால் அவர்கள் தூரத்தை வைத்திருக்க வாய்ப்பு அதிகம் என்று பத்தில் மூன்று பேர் கூறுகிறார்கள்.