Hollandtamilan

லட்சக்கணக்கான கொக்குகள் Limburg வழியாக இடம்பெயர்கின்றன.

சமீபத்திய நாட்களில் லட்சகணக்கான கொக்குகள் லிம்பர்க் முழுவதும் பறந்து செல்வதை  பார்த்திருக்கலாம்.மேலும், Raymond Oostwegel van de Vogelwacht Limburg இன்  கூற்றுப்படி, வழக்கமாக கொக்குகள்  தென்மேற்கு பிரான்சிலிருந்து ஜெர்மனிக்கு பறக்கின்றன, சில நேரங்களில் கொக்குகள் தெற்கு லிம்பர்க்கின் கிழக்குப் பகுதியில் பறந்து செல்வதை காணலாம். ஆனால் கிழக்கு காற்று காரணமாக நாரைகளை  தெளிவாக காணமுடியும்.

பெரிய அளவிலான நாரைகள் சாதகமான வானிலை நிலைமைகளைப் பயன்படுத்தி, பின்லாந்து மற்றும் சுவீடனில் இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்குச் செல்கின்றன. நாரைகள் எதிரொலி மூலம் பறப்பதில் தேர்ச்சி பெற்றவை. நாரைகள் எப்போதும் வி வடிவத்தில் பறக்ககூடியவை ஒன்றுக்கொன்று  காற்றிலிருந்து விலகி இருக்க நாரைகள் வி வடிவத்தில்பறக்கின்றன.  மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நாரைகளால்  பறக்க முடியும்.

சில நேரங்களில் அதிக காற்றால் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் நாரைகளால்  பறக்க முடியும். நாரைகளுக்கான தகவல்தொடர்பு வழிமுறையாக எதிரொலி செயல்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவருக்கொருவர் தடம் மாறக்கூடாது என்பதற்காக நாரைகள்  எதிரொலி முறையை பின்பற்றுகின்றன. தொடர்ந்து பறக்க முடியாத நாரைகள்  ஓய்வெடுக்க தரை இறங்குவார்கள், பின்னர் அவர்கள் அடுத்த குழுவில் இணைய இந்த எதிரொலி மிகவும் முக்கியமானது..