Hollandtamilan

பெற்றோர்கள் மே மாதத்தில் தங்கள் குழந்தை பராமரிப்பு பங்களிப்பைப் (kinderopvang)திரும்ப பெறுவார்கள்.

குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு மே மாதத்தில் செலுத்திய பணத்தின் பெரும்பகுதியை பெற்றோர்கள் திரும்ப பெறுவார்கள் . கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா நடவடிக்கைகள் பொருந்தும் வகையில் மே 20 வரை பணத்தைத் திரும்பப்பெறும் திட்டத்தை தொடர அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  மார்ச் 16 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பங்களிப்பைப் திரும்ப பெறுவார்கள். அந்தக் காலத்தில் குழந்தை பராமரிப்பு இல்லம் பெரும்பாலும் மூடப்பட்டு இருந்தது .  ஆனால் ஒரு முக்கியமான தொழிலைக் கொண்ட பெற்றோர்கள், எடுத்துக்காட்டாக சுகாதாரப் பாதுகாப்பு அல்லது காவல்துறையில் வேலை பார்க்கும் பெற்றோர்கள் – தமது முளுபங்களிப்பையும் திரும்ப பெற முடியும். அவர்களது பங்களிப்பு அவர்களது  கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும் .

சுய ஊரடங்கின் போது அவர்கள் அவசியம் வேலைக்கு போக வேண்டும் என்பதால்  அவர்கள் தங்கள் குழந்தைகளை தினப்பராமரிப்புக்கு அழைத்துச் செல்ல முடியும்.