Hollandtamilan

ஜூன் 1 முதல் Den Haag இல் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படலாம்

செவ்வாய்க்கிழமையன்று KHN (Koninklijke Horeca Nederland இயக்குனர் Dirk Beljaarts கூறுகையில்  இறுதியாக நல்ல செய்தி கேட்டு மகிழ்ச்சியடைகிறேன் ஆனால் ஜூன் 1 மிகவும் தொலைவில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் . உணவகங்கள் திறப்பது பற்றிய செய்திகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சமையல் துறைக்கான தொழில் சங்கத்தின் இயக்குநர் பொருளாதார விவகார அமைச்சில் புதன்கிழமை ஒரு கூட்டம் நடத்துவார்.

கடந்த வாரம் எங்களுக்கும் ஆலோசனைகள் இருந்தன, ஆனால் அது அந்த நேரத்தில் மிகவும் ஏமாற்றமளித்தது. அந்த ஆலோசனையின் பின்னர், சமையல்  தொழிலுக்கு எந்த நடவடிக்கையும் தளர்த்தப்படவில்லை. கொரோனா நச்சுயிர்  பரவுவதைத் தடுக்க நெதர்லாந்தில் உள்ள தேநீர் விடுதிகள்  மற்றும் உணவகங்கள் மார்ச் 15 முதல் மூடப்பட்டுள்ளன.

சில நிபந்தனைகளின் கீழ் ஜூன் 1 முதல் உணவகங்களை  திறக்க அனுமதிக்கப்படுவதாக KHN இயக்குனர் தெரிவித்துள்ளார்.  1.5 மீட்டர் தூரத்துடன், தொழிலாளர்களும் மட்டுபடுத்தபடுகிறார்கள். சமையல் துறையில் உள்ள தொழில் முனைவோருக்கு பெரும் சிரமங்கள் உள்ளன .ஜூன் மாதம் கூடுதல் ஊதியத்துடன், விடுமுறை ஊதியமும் தரவேண்டியிருக்கும்.