Hollandtamilan

சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் ,நாசி ஆட்சிக்கு பலியான அனைவருக்கும், மரியாதை நிமித்தமாக மே 4 மற்றும் 5 தேதிகளில் அனைவரையும் தேசிய கொடி ஏற்றுமாறு அழைக்கிறோம்.

இந்த ஆண்டு மே 4 ஆம் தேதி, கொடியை சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை அரை கம்பத்தில்  ஏற்றலாம்.  மே 5 அன்று நாம் அடைந்த சுதந்திரத்தை கருத்தில் கொள்வோம். ஒளிமயமான எதிர்காலம் எப்போதும் இருக்கும் என்று எங்கள் தியாகிகளுக்கு தெரியப்படுத்துவோம் .

கொரோனா சட்டங்கள் காரணமாக, மே 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நினைவேந்தலை வீட்டில் இருந்தபடி செய்யுமாறு Heerlen நகராட்சி கேட்டுள்ளது .மே 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் போரில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக நாள் முழுவதும் நெதர்லாந்து தேசிய கொடியை அரை கம்பத்தில் தொங்கவிடுமாறு Heerlenனில் உள்ள அனைவரையும் Heerlen நகராட்சி கேட்டுள்ளது.

Heerlen மற்றும்  Hoensbroekஇல் உள்ள போர் நினைவுச் சின்னங்களிலும், யூத நினைவுச்சின்னத்திலும், அனைத்து Heerlen குடியிருப்பாளர்கள் சார்பிலும் மாலை அணிவிக்கப்படுகிறது. Heerlen Akerstraat இல்  Heerlen நகரபிதா Emile Roemer ரும் Hoensbroek இல் துணை  நகரபிதா Martin de Beer ரும் மலர்வளையம் வைத்து மரியாதையை செலுத்துவார்கள் .