Hollandtamilan

சாலைகளிலும் பேரங்காடி வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் .

கொரோனா நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது பொதுமக்களுக்கு கடினமாக உள்ளத்தால் வீதிகளில் ஜனநடமாட்டம் அதிகமாக உள்ளது . பெயர்ச்சி முகவரான (mobiliteitsbureau) DAT தனது டச்சு இடமாற்றம் குழுவின் பகுப்பாய்விற்குப் பிறகு இதை முடிக்கிறது, இதில் சுமார் 5000 டச்சு மக்களின் பயணங்கள் ஒரு செயலி  வழியாக கண்காணிக்கப்படுகின்றன.

DAT நிறுவனத்தைப் பொறுத்தவரை, எல்லா தரவுகளும் குறிப்பாக கடந்த மூன்று வாரங்களில் பயணங்களின் எண்ணிக்கை, தூரம் மற்றும் காலம் அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.   நல்ல வானிலை காரணமாக சைக்கிள் ஓட்டுநர்களும் பாதசாரிகளும் தெருவில் செல்வதை காணக்கூடியதாக இருப்பதை  கண்டோம் என்று DAT இயக்கம் நிபுணர் Sander கூறுகிறார்.

சமீபத்திய வாரங்களில் சாலையில் ஓட்டுநர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காணப்படுகிறது.  Brabants Dagblad கூற்றுப்படி அங்காடி வீதிகள் ஜனநெருக்கடியாக இருந்தது .குடும்பங்கள் தெருக்களில் கூட்டம்கூட்டமாக செல்வதை காணக்கூடியதாக இருந்தது . சந்தைக்கு வந்து ஒரு (Kroket) வாங்கி சாப்பிடுவதில் உள்ள சுகம் வீட்டில் அடைபட்டு இருக்கும்போது கிடைக்காது என்று NOS செய்தித்தாளுக்கு ஒரு  நபர் தெரிவித்தார் .