Hollandtamilan

கொரோனா காரணமாக ஒரு வேளை உணவு இல்லாதவர்களுக்கு நெதர்லாந்து செஞ்சிலுவை சங்கம் பணம் சேகரிக்கிறது.

இன்று முதல்  செஞ்சிலுவை சங்கம் நெதர்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு உதவிக்கு நிதியளிப்பதற்காக gironummer 7244 ஐ திறக்கிறது. கொரோனா நெருக்கடியால் வருமானத்தை இழந்து  ஒரு நல்ல உணவை வாங்கி உட்கொள்ள முடியாத நிலைமையில் வாடுபவர்களுக்கு உதவும் நல்லெண்ணத்தில் இந்த சேவை தொடக்கபட்டுள்ளது .

சுமார் 25,000 பேருக்கு உணவு உதவி தேவை என்று நாங்கள் மதிப்பிடுகிறோம், “என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் இயக்குனர் Marieke van Schaik தெரிவித்துள்ளார் . கொத்தனார் , சமையல்  அல்லது துப்புரவுப் பணிகளில் பணியாற்றிய பெரும் பகுதியினர்  இப்போது தெருவில் இருக்கிறார்கள். “அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு குறைந்தபட்ச உணவை உண்ண முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று Marieke van Schaik கூறுகிறார். “ஒருவருக்கு காலை உணவு அல்லது மதிய உணவு மற்றும் இரவு உணவை வழங்க 3.50 யூரோக்கள் தேவை, என பட்ஜெட் தகவலுக்கான தேசிய நிறுவனம்  Nibud கணக்கிட்டுள்ளது . 2 யூரோக்களுக்கு ஒரு சூடான மாலை உணவை தயாரிக்க முடியும் என்று Nibud உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.

மே முதல், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு உதவி வழங்க செஞ்சிலுவைச் சங்கம் உணவு வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதி வரை அதை செயல்படுத்த  நிறுவனத்திடம் போதுமான நிதி  இல்லை, இதற்காக தான்  இந்த நிதி திரட்டும் பிரச்சாரம் என  Marieke van Schaik  கூறினார் “ஆண்டு இறுதி வரை வாரத்திற்கு 3,000 பேருக்கு உதவிக்கு உத்தரவாதம் அளிக்க நாங்கள் விரும்புகிறோம், எனவும் அவர் கூறினார் .