Hollandtamilan

ஒன்பது மாடுகள் Doesburg சதுப்புநிலத்திலிருந்து மீட்கப்பட்டன.

Doesburg Gelderland இல் உள்ள சதுப்பு நிலத்திலிருந்து ஒன்பது மாடுகளை கடும் முயற்சிக்கு பின் மீட்டார்கள். நேற்று  காலை 08:00 மணி முதல் தீயணைப்பு படை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

தீயணைப்பு படையின் கூற்றுப்படி, கடைசி மூன்று மாடுகள் சதுப்பு நிலத்தில் ஆழமாக சிக்கிக்கொண்டன. சினைப்பசுக்கள் நேற்றிரவு மேய்ச்சலில் இருந்து தப்பித்திருக்கலாம் என்று Omroep Gelderland கூறுகிறது . ஒன்பது மாடுகளின் வயிற்றுப்பகுதி சேற்றில் புதைந்ததால்  மாடுகளால்  எங்கும் செல்ல முடியவில்லை. விவசாயி கூற்றுப்படி மாடுகள்  காயமடையவில்லை.