Hollandtamilan

உணவகங்களில் வேலைபார்த்தவர்களுக்கு விடுமுறை ஊதியம்(Holiday Pay) வழங்குவதில் சிரமம் .

லிம்பர்க்கில் உள்ள பல உணவு  நிறுவனங்கள் அடுத்த மாதம் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை ஊதியம் வழங்க அவர்களிடம் போதிய  பணம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள் . இது பற்றி நெதர்லாந்தின் லிம்பேர்க் பிராந்திய உணவக மேலாளர் Christiaan Fijen  கூறுகையில் .

“விடுமுறை கொடுப்பனவு செலுத்த வேண்டியிருந்தால், உணவகங்கள் கடுமையான சரிவை சந்திக்கவேண்டியிருக்கும் . லிம்பேர்க் உணவு  நிறுவனங்களில் எத்தனை  சதவீதத்தினர் இப்போது விடுமுறை ஊதியத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்று தெரியவில்லை  ஆனால் பருவகால வேலை செய்யும் பல உணவகங்களுக்கு  இது கடினமாக இருக்கும்.

குறிப்பாக அவை பெரும்பாலும் குளிர்காலத்தில் பணத்தை இழக்கின்றன. மார்ச், ஏப்ரல் மற்றும் மே போன்ற மாதங்களில் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவை செலுத்துவதற்கு மிகவும் முக்கியம். “. Fijen கூற்றுப்படி, விடுமுறை ஊதிய முறையில் தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் ஒரு நல்ல  தீர்வுக்கு வரவில்லை. “எனவே விடுமுறை ஊதியம் எவ்வாறு செலுத்தப்படுகிறது என்பது இப்போது ஒரு தனிப்பட்ட மட்டத்தில் ஆராயப்படுகிறது,”

முதலாளியும் பணியாளர்களும் இது குறித்து விவாதித்து இது ஒரு நல்ல முடிவிற்கு வருவது உகந்தது  என்று நம்புகிறோம்.  பணியாளர் நல்ல நிலைமையில் இருந்தால் அவரது விடுமுறை ஊதியம் பின்னர் வழங்கப்படும் .பணியாளர் கடன்களை அடைக்க வேண்டிய நிலையில் இருந்தால் விடுமுறை ஊதியம் உடனடியாக வரவில் வைக்கப்படும் .