Hollandtamilan

பிரான்ஸ் நாட்டில் பாரிய சத்தத்துடன் வெடித்த பட்டாசால் இளைஞன் ஒருவர் மரணம்

பிரான்ஸ் நாட்டில் பாரிய சத்ததுடன் வெடித்த பட்டாசால் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள அல்சேஸ் பிரதேசத்தின் தலைநகரமும் பிரதான நகரமான Strasbourg (Bas-Rhin) நகரின் தெற்கு கிராமமான Boofzheim எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.புதுவருடத்தை பட்டாசு வெடித்து கொண்டாடிக்கொண்டிருந்த 25 வயதுடைய இளைஞன் மோட்டார் பட்டாசு ஒன்றை (tir de mortier) வெடிக்க முற்பட்டபோது, அது அவனது அருகிலேயே பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது.

இப்பட்டாசு சத்தினால் இளைஞன் அதிர்ச்சிக்குள்ளாகி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் இரவு 8 மணிக்குப் பின்னர் வெளியில் பயணிப்பதோ, பட்டாசுகள் வெடிப்பதோ தடை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.