Hollandtamilan

பாகிஸ்தான் நாட்டவர்கள் பிரான்சுக்கு புலம்பெயர்வதற்கு உடனடியாக தடைவிதிக்கவேண்டும்

பிரான்ஸ் மீது பாகிஸ்தான் முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு பதிலடியாக, பாகிஸ்தானிலிருந்து மக்கள் பிரான்சுக்கு புலம்பெயர்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என பிரெஞ்சு அரசியல்வாதி ஒருவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.பிரான்சில் முகமது நபியின் கேலிச்சித்திரங்கள் காட்டப்பட்டதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஆதரவளிப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரான்சின் Nice நகரில் மூவர் கொல்லப்பட்டனர், Avignonஇல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், சவுதியில் பிரான்ஸ் தூதரக பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டார்.

முகமது நபியின் கேலிச்சித்திரங்களை வகுப்பில் காட்டியதற்காக தீவிரவாதி ஒருவனால் கொல்லப்பட்ட ஆசிரியரான சாமுவேல் என்பவரது இறுதிச்சடங்கில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இன்னும் கேலிச்சித்திர கலாச்சாரம் தொடரும் என்றும் சுதந்திரத்திற்காக பிரான்ஸ் தொடர்ந்து போராடும் என்றும் கூறியிருந்தார். அதற்காக, பாகிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகள் மேக்ரானை கடுமையாக விமர்சித்தன. இஸ்லாமிய நாடுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மேக்ரான் இஸ்லாமை தாக்குவதாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பிரெஞ்சு அரசியல்வாதியான Marine Le Pen, பாகிஸ்தானிலிருந்து மக்கள் புலம்பெயர்வதற்கு தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவு செய்த Marine Le Pen, பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் பிரான்சுக்கு எதிராக பயங்கர போராட்டங்கள் நடந்துள்ளன.ஆகவே, பிரான்சை விமர்சிக்கும் இந்த நாடுகளிலிருந்து பிரான்சுக்கு மக்கள் புலம்பெயர உடனடியாக தடை விதிக்கவேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் Marine Le Pen.