Hollandtamilan

தடுப்பூசிகளுக்கான முன்னுரிமை பட்டியலில் ஆசிரியர்களை சேர்க்கவுள்ள ஜேர்மனி

கோவிட் -19க்கு எதிரான தடுப்பூசிகளுக்கான முன்னுரிமை பட்டியலில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தினப்பராமரிப்பு ஊழியர்களை இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.ஜேர்மனியில் வரும் பிப்ரவரி 14-ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பூட்டுதல் மார்ச் 7-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆனால் தொடக்க பள்ளிகள், நர்சரிகள், சலூன்கள் மற்றும் ஒரு சில கடைகள் திறக்கப்பட முடிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஆசிரியர்களும், தினப்பராமரிப்பு ஊழியர்களும் தங்கள் வேலைகளைச் செய்யும்போது சமூக தூரத்தைத் தக்கவைத்துக்கொள்வது என்பது சாத்தியமில்லை.

இதனால், கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான முன்னுரிமை பட்டியலில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தினப்பராமரிப்பு ஊழியர்களை சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.பெர்லின் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பிப்ரவரி 22-ஆம் திகதி முதல் தொடக்க மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.