Hollandtamilan

ஜேர்மனியில் மீண்டும் மீண்டும் கொரோனா விதிகளை மீறுவோரை அகதிகள் முகாமில் அடைக்க அரசாங்கம் முடிவு.

ஜேர்மனியில் மீண்டும் மீண்டும் கொரோனா விதிகளை மீறுவோரை அகதிகள் முகாமில் அடைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.ஜேர்மனியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், புதிய திடீர்மாற்றம் பெற்ற பிரித்தானிய வகை கொரோனாவும் பரவுவதை தவிர்க்க அந்நாடு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.Saxony மாகாணம், தனிமைப்படுத்தலை மீறுவோரை அகதிகள் முகாம் ஒன்றில் அடைக்க முடிவு செய்துள்ளது.மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தல் முதலான கொரோனா விதிகளை மீறுவோர் மட்டும் இந்த அகதிகள் முகாமில் அடைக்கப்படுவார்கள்.

மீண்டும் மீண்டும் கொரோனா விதிகளை மீறுவோரை அடைக்க இரண்டு மருத்துவமனை அறைகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது, அவற்றை பொலிசார் கண்காணிப்பார்கள். Brandenburgஇல் அகதிகள் முகாம் ஒன்றின் ஒரு பகுதி விதிகளை மீறுவோருக்காக ஒதுக்கப்படும் நிலையில், Schleswig-Holsteinஇல் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஒன்றின் ஒரு பகுதி விதி மீறலில் ஈடுபடுவோருக்காக ஒதுக்கப்பட உள்ளது.எல்லாவற்றிற்கும் மேல், ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், அனைத்து பொது போக்குவரத்தையும் ரத்து செய்து, மெகா பொது முடக்கம் ஒன்றை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.