Hollandtamilan

ஜேர்மனியில் புதிய தேசிய ஊரடங்கு அமுல்! தடைகள், கடும் கட்டுப்பாடுகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.

ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஜனவரி 10 ஆம் தேதி வரை புதிய தேசிய ஊரங்கு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.ஜேர்மனியில் இனி அதிகட்சமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24 முதல் 26ம் திகதி வரை இதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விலக்கு அளிக்கப்படவில்லை.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்ட பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 16ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும்.உணவு பார்சல் மற்றும் டெலிவரிக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது, ஆனால் பார்சல் உணவை வாங்கிய கடைக்கு அருகேயே சாப்பிட கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சலூன், பள்ளிகள் மற்றும் தினப்பராமரிப்பு மையங்கள் மூடப்படும். பொதுவெளியில் மதுஅருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் மட்டுமே மத சேவைகள் நடத்த வேண்டும் என உத்தரவு.மக்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் மற்றும் முற்றிலும் தேவையில்லாத தொடர்புகளை குறைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும், பொருளாதார ஆதரவு வழங்கப்படும் என ஜேர்மன் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.