Hollandtamilan

ஜேர்மனியில் பிரித்தானிய கடவுச்சீட்டை இழக்கவேண்டிய சூழல்.

சமீப காலமாக புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பல நடவடிக்கைகளை பிரித்தானியா எடுத்துவந்த நிலையில், இப்போது பிரித்தானியர்களே இன்னொரு நாட்டில் புலம்பெயர்ந்தோர் நிலைக்கு தள்ளப்படும் சூழல் வரலாற்றில் முதன்முறையாக உருவாகியுள்ளது.பிரெக்சிட் என்னென்ன பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை அது நடைமுறையில் கற்றுக்கொடுக்கத் துவங்கியுள்ளது.அந்த வகையில், ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்கள் எதிர்பாராத சிக்கல் ஒன்றை எதிர்கொண்டுள்ளார்கள்.

ஜனவரி 1ஆம் திகதி உலகம் முழுவதும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நேரத்தில், ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்கள் மூன்றாம் நாட்டவர்கள் என்ற நிலைக்கு ஆளாக இருக்கிறார்கள்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டவர்களல்லாதவர்கள் ஜேர்மனியில் இரட்டைக் குடியுரிமை பெற இயலாது என்ற விதியின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடு அல்ல என்பதால், ஒரு பிரித்தானியர் ஜேர்மன் குடியுரிமை பெற விரும்பினால், அவர் தனது பிரித்தனிய பாஸ்போர்ட்டை கைவிடவேண்டும்.அதாவது அவர் ஒன்றில் ஜேர்மானியராக ஜேர்மனியில் வாழலாம் அல்லது பிரித்தானியராக பிரித்தானியாவுக்கு திரும்பலாம்.

 

பிரித்தானியர்களைப் பொருத்தவரையில், தங்கள் பிரித்தானிய குடியுரிமையை விடவேண்டும் என்பது மிகப்பெரிய சவால் என்பதை மறுக்க இயலாது.ஆனால், இரட்டைக் குடியுரிமை என்பதை நீக்கிவிடக்கூடாது, அது நன்மை பயக்கும் என கருதுகிறார்கள் நிபுணர்கள். அதாவது, தூதரக உறவுகள் பாதிக்கப்படும் ஒரு சூழல் ஏற்படும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள அவர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள் என்பது அவர்களது வாதம்.</p><p>ஆனால், இந்த விடயத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது இப்போதைக்கு யாருக்குமே தெரியாது.