Hollandtamilan

குறைந்தது 10 ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸ் நம்மை விட்டு போகாது .

கொரோனா வைரஸ் குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நம்முடன் இருக்கப் போகிறது என்று ஜேர்மன் நிறுவனமான  Bionteck நிறுவன CEO சாஹின் கூறியுள்ளார். இதனால் நமக்கு ‘இயல்பு நிலை’ என்பதற்கான ஒரு புதிய வரையறை தேவைப்படும் என்று அவர் கூறுகிறார்.

தற்போது உலகம் முழுவதும் கண்டறியப்பட்டுவரும் புதிய வகை கொரோனா வைரஸ் மிகவும் தொற்றக்கூடியது என்றும் அதிக இறப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் நிபுணர்களின் எச்சரிக்கைகளை மத்தியில், சாஹினின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.இருப்பினும், புதிய மாறுபாட்டிற்கான தடுப்பூசியை சுமார் 6 வாரங்களில் சரிசெய்ய முடியும் என்று சாஹின் கூறுகிறார்.

ஜேர்மன் நிறுவனமான Bionteck கின் தடுப்பூசி, அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசருடன் இணைந்து உருவாக்கப்பட்டது, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

சமீபத்திய வாரங்களில் முக்கியமாக லண்டன் மற்றும் பிரித்தானியாவின் தென்கிழக்கில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் மாறுபாடு, உலகளவில் கவலையைத் தூண்டியுள்ளது, ஏனெனில் இது மிகவும் எளிதாக பரவக்கூடும் என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளது. கடந்த வாரம், சாஹின் கூறியதாவது: “எங்கள் தடுப்பூசி இந்த புதிய மாறுபாட்டிலிருந்து பாதுகாப்பை வழங்க முடியுமா என்பது எங்களுக்குத் தெரியாது.” எவ்வாறாயினும், இந்த தடுப்பூசியின் நோயெதிர்ப்பு மறுமொழியும் புதிய வைரஸ் வகைகளை சமாளிக்க அதிக வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வேரியண்ட் வைரஸில் உள்ள புரதங்கள் ஏற்கெனவே உள்ள விகாரங்களைப் போலவே 99% சமமாக உள்ளது என்று சாஹின் கூறியுள்ளார். எனவே பயோஎன்டெக் அதன் தடுப்பூசி புதிய வகை வைரசுக்கு எதிராக செயல்பட பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது.