Hollandtamilan

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வேண்டுமா? நாளை முதல் இதை செய்யுங்கள்: பிரான்ஸ் பிரதமர் அறிவுறுத்தல்.

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவேண்டுமானால், எட்டு நாட்களுக்கு மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் பிரதமர்.தங்கள் தூரத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட விரும்புவோர், நாளை முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார் பிரான்ஸ் பிரதமர் Jean Castex.

பிரான்ஸ், டிசம்பர் 15உடன் பொதுமுடக்கத்தை நெகிழ்த்தி இரவு நேர ஊரடங்கை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் நேரத்தில் பயணப்பட திட்டமிட்டுள்ளவர்கள், குறிப்பாக முதியர்களை சந்திக்க இருப்பவர்கள், முன்கூட்டியே ஒரு வாரத்திற்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.விடுமுறைக் காலத்தில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதால், மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அத்துடன், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, உணவு மேஜையில் ஆறு பேர் (சிறுவர்களுக்கு விதிவிலக்கு) மட்டுமே அமர்வது முதலான விதிகளை பின்பற்றுவது குறித்தும் அரசு மக்களுக்கு நினைவூட்டியுள்ளது.