Hollandtamilan

கண்டுபிடிப்பதற்கே கடினமாக புதிய பிரெஞ்சு வைரஸ்..

ஒவ்வொரு நாடுகளிலும் ஆபத்தான புதிய உருமாறிய கொரோனா வைரசுகள் உருவாகி பெரும் ஆபத்தை உருவாக்கி வருகின்றது.பிரான்சின் பிரெத்தோன் (Bretagne) மாநிலத்தில் உருமாறிய புதிய வைரஸ் ஒன்று (“Virus breton”)அடையாளம் காணப்பட்டுள்ளது.

சாதாரண PCR சோதனைகள் மூலம் அடையாளம் காண முடியாத ஆபத்தான வைரசாக இது உருவாகி உள்ளது என சுகாதாரப் பொதுத் தலைமையகம் அறிவித்துள்ளது.சாதாரண PCR சோதனையில் எதிர்மறைப் பெறுபேறுகள் காணப்பட்ட நிலையிலும், தொடர்;சியன அறிகுறிகள் இருந்தமையால் மேலதிகப் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையிலேயே இந்த உருமாறிய வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.

இது மிகவும் ஆபத்தான தொற்றாக இருக்கும் எனவும் பிரெத்தோன் மாநிலத்தில் 10 இற்கும் மேற்பட்டவர்களிற்கு இந்த வைரசின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இரத்தம், மற்றும் சுவாசப்பையின் சோதனைகள் மூலமே, இது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தொற்று அதிகரித்தால் பெரும் ஆபத்து நிகழலாம் என அஞ்சப்டுகின்றது.