Hollandtamilan

நெதர்லாந்தில் தேசத் துரோகம் அல்லது கலவரத்தில் ஈடுபட்டோர் கைது

அண்மையில்  கலவரத்திற்காக அல்லது தூண்டப்பட்டதற்காக நாடு முழுவதும் 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் இருந்தே சிலர் CCTV மூலம்  அடையாளம் கண்டுபிடிக்க ப்பட்டனர், மற்றவர்கள் கலவரத்தைத் தொடங்க இணையத்தில் அழைத்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

Tiel என்ற நகரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, Tielலில் கலவரத்திற்கு அழைப்பு விடுத்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். Nijmegenனில் ஊரடங்கு உத்தரவை மீறிய  காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கொரோனா நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய சமூக ஊடகங்களில் அழைப்புகள் பரப்பப்பட்டன. Tilburgக்கில் தேசத் துரோக செயலில் ஈடுபட்டதாக  ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை Eindhovenவனில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். Eindhovenவனைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் Jumbo பல்பொருள் அங்காடி  கிளையை கொள்ளையடித்ததற்காக கைது செய்யப்பட்டார் . Eindhovenவனைச் சேர்ந்த 31 வயது நபர் வன்முறை செயலில் ஈடுபட்டதால்  கைது செய்யப்பட்டுள்ளார்,

மேலும் Nunspeetட்டைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருபர் நீர் பீரங்கியின் கீழ் மிதிவண்டியை வீசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களில் ஒருவர் Prorail ஓட்டுனருக்கு  சொந்தமான காரை எரித்ததற்காக  கைது செய்யப்பட்டார்  Eindhovenனில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 72 சமூக விரோதிகள்  இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் விரைவில்  கைது செய்யப்படுவர் என்று போலீசார் கூறுகின்றனர். தற்பொழுது நாடு முழுவதும் அமைதியாக உள்ளது . எங்கும் எந்த அசம்பாவிதமும்  ஏற்படவில்லை. நாட்டில் அமைதியை நிலைநாட்ட உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை Amsterdam காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .