Hollandtamilan

வேட்பாளர் தேர்வை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பா போல் மிதித்துவிடுவேன்.. சீமான் அதிரடி!

நான் அறிவிக்கும் வேட்பாளர் யாராவது எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். நாம் தமிழர் கட்சிக்கு நான்தான் கட்டளை தளபதி. நான் போட்ட கோட்டிற்குள்தான் நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்க மாட்டேன்.

நான் ஓடும் திசையில்தான் நீங்களும் ஓட வேண்டும். நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து யாரும் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது. மீறி யாராவது எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன் என சீமான் கூறியுள்ளார். இது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் பேசுகையில் நாம் தமிழர் கட்சி மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதுவரை ஓயமாட்டேன். ஒதுக்கக் கூடிய சமூகத்திற்கு நாம் தமிழர்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறோம். உலகமே என் பேச்சை கேட்கும், ஆனால் நான் பிரபாகரன் பேச்சை தவிர யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என்று கூறினார்.