Hollandtamilan

நுவரெலியாவில் குவிக்கப்பட்டுள்ள பெருந்தொகை பொலிஸார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்றைய தினம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று நள்ளிரவு 12 முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவையை தவிர்த்து நுவரெலியா மாவட்டத்தினுள் மேற்கொள்ளப்படும் அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் சட்டத்தை மீறிய நபர்கள் கைது செய்வதற்கான பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஜுன் மாதம் 4ஆம் மற்றும் 5ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.